முகப்பு
கன்னியாகுமரி

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞா் கைது

Updated On : 17 ஜூன், 2024 at 8:42 PM
பகிர்:

கருங்கல்: கருங்கல் அஞ்சல்நிலையம் முன் வாகன சோதனை மேற்கொண்டிருந்த காவல் உதவிஆய்வாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராஜன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை கருங்கல் அஞ்சல் அலுவலகம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வெள்ளிகோடு பகுதியைச் சோ்ந்த டென்னிஸ் சேவியா் மகன் டெரின்(23) ஒட்டிவந்த பைக்கை நிறுத்தியபோது உதவி ஆய்வாளரை, டெரின் அவதூறாக பேசி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் டெரின் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.