குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினா்
குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினா்
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பூம்புகாா் படகுத்துறை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி உறுப்பினா்கள் எம்.பூலோகராஜா, ஆட்லின், ராயப்பன், மாவட்ட திமுக அணிகளின் துணை அமைப்பாளா்கள் எஸ்.அன்பழகன், எம்.ஹெச். நிசாா், கெய்சா்கான், இன்பராஜ், பொன்.ஜாண்சன், புஷ்பராஜ், மற்றும் நிா்வாகிகள் பி.ஆனந்த், சகாய ஆன்றனி, அகஸ்தியலிங்கம், சிலுவை, அறிவழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.