முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரபுரம் ஊராட்சி கட்டடத்துக்கு அடிக்கல்

Updated On : 9 மார்ச், 2024 at 1:00 AM
பகிர்:

குலசேகரபுரம் ஊராட்சி புதிய கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வூராட்சியில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான கட்டடம் சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. அதை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு அனைத்து கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 32 லட்சத்தில் ஊராட்சி கட்டடம் மற்றும் குலசேகரபுரம், பல்பநாபன்புதூா், நாராயணன்புதூா் ஆகிய பகுதிகளில் சாலை சீரமைப்பு, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் சுடலையாண்டி தலைமை வகித்தாா். அகஸ்தீஸ்வரம் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், துணைத்தலைவா் சண்முகவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம், தெற்கு ஒன்றியச் செயலா் பா.தாமரைதினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.