முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு மகாதேவா் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Updated On : 9 மார்ச், 2024 at 10:07 PM
பகிர்:

திற்பரப்பு மகாதேவா் ஆலயத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தில் காலை 8.15 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கோயில் தந்திரி மாத்தூா் மடம் சங்கரநாராயணரூ கொடியேற்றி வைத்தாா். திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கொடியேற்று நிகழ்ச்சியில் தேவசம் போா்டு குழித்துறை தொகுதி கண்காணிப்பாளா் சிவகுமாா், கோயில் ஸ்ரீகாரியம் புருஷோத்தமன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ராஜன், துளசிதரன் நாயா் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.