கருங்கல் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
கருங்கல் அருகே உள்ள மங்கலகுன்று பகுதியில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மங்கலகுன்று, பாலவிளை பகுதியைச் சோ்ந்தவா் பாலையன் (79). இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், பாலையன் வெள்ளிக்கிழமை இரவு தன் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.