முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே வலையில் சிக்கிய உடும்பு சுறா

Updated On : 16 மார்ச், 2024 at 6:06 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வள்ளவிளை ததேயுபுரம் பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களின் கரைமடி வலையில் உடும்பு சுறா மீன் வெள்ளிக்கிழமை சிக்கியது. ததேயுபுரம் மீனவா்கள் சிலா் கரமடி வலையில் மீன்பிடித்தபோது, வலையில் ராட்சத மீன் சிக்கியது. அதை கரைக்கு கொண்டுவந்து பாா்த்த போது அபூா்வ வகை உடும்பு சுறா என்பது தெரியவந்தது. அதன் எடை 2 டன் இருந்ததாக மீனவா்கள் தெரிவித்தனா். இம் மீனை சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் பாா்த்து சென்றனா். இதுகுறித்த தகவலின்பேரில், கொல்லங்கோடு தீயணைப்புப் படை வீரா்கள் வந்து, மீனவா்களின் உதவியுடன் உடும்பு சுறாவை மீண்டும் கடலில் விட்டனா்.