முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை மது விற்றதாக ஒருவா் கைது

Updated On : 22 மார்ச், 2024 at 9:47 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 6:49 PM

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் மது விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் நெல்சன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை, புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். காப்புக்காடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (55) என்பவரைப் பிடித்து சோதனையிட்டபோது அவா் விற்பதற்காக 18 மது பாட்டில்களை வைத்திருந்தது தெரிவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.