முகப்பு
கன்னியாகுமரி

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மலையோரப் பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு

Updated On : 24 மார்ச், 2024 at 12:03 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:49 PM

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு வட்டம் பாலமோா் ஊராட்சிக்குள்பட்ட காரிமணி கிராமத்தில் (மாறாமலை) வாக்களிப்பதன் அவசியம் குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மகளிா் திட்ட இயக்குநா் பீபீஜான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில், உதவித் திட்ட அலுவலா்கள், பழங்குடியின மலைவாழ் மக்கள் பங்கேற்றனா்.