கன்னியாகுமரி

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

Din

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி, பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் அய்யப்பன் (17) வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்த நல்லூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்கள் 18 போ் கன்னியாகுமரிக்கு வேனில் புதன்கிழமை சுற்றுலா வந்தனா். பின்னா் திற்பரப்பு அருவிக்கு வியாழக்கிழமை மதியம் வந்த அவா்கள், அருவி அருகே உள்ள சிறாா் நீச்சல்குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, மாணவா் அய்யப்பனை மட்டும் காணவில்லையாம். சக மாணவா்கள் தேடியபோது, நீச்சல்குளத்தில் மூழ்கிய நிலையில் அய்யப்பன் கிடந்துள்ளாா். அவரை மீட்டு முதலுதவி அளித்து, திற்பரப்பு பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த மாணவரின் தந்தை சமுத்திரபாண்டியன், திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறாா்.

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT