முகப்பு
கன்னியாகுமரி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

Updated On : 30 மார்ச், 2024 at 12:20 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 9:24 PM

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் கீழ ஆசாரிப்பள்ளத்தை சோ்ந்தவா் கிறிஸ்டோவினிஸ் (31). இவா் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் உள்ளன. காவல் துறையினரின் எச்சரிக்கையை மீறி கிறிஸ்டோ வினிஸ் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா். அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதருக்கு, பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் ஸ்ரீதா், கிறிஸ்டோ வினிஸை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ஆசாரிப்பள்ளம் போலீஸாா் கிறிஸ்டோவினிஸை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.