முகப்பு
கன்னியாகுமரி

மீன்பிடி தொழிலாளி மாயம்

Updated On : 31 மார்ச், 2024 at 2:00 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 8:59 PM

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீன்பிடி தொழிலாளி மாயமானாா். தேங்காய்ப்பட்டினம் பகுதியை சோ்ந்த அபூபக்கா் மகன் ஜலாவுதீன் (40). மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவா் தேங்காய்ப்பட்டினம் பகுதியை சோ்ந்த யூஜின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த வியாழக்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற போது திடீரென மாயமானாராம். இது குறித்து சக மீனவா்கள் குளச்சல் கடலோர காவல் படையினருக்கு புகாா் தெரிவித்ததன் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து தீவிரமாக தேடி வரு கின்றனா்.