குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு
குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், வெயின் தாக்கம் இயல்பை விட அதிகமாக உள்ள போதிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் புதன்கிழமை அணைப் பகுதிகள் உள்பட பரலாக சாரல் மழை பெய்தது. சிற்றாறு 2 அணைப் பகுதியில், 33.2 மி.மீ. மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக புத்தன் அணையில் 26.2. மி.மீ. மழையும், சிற்றாறு 1 இல் 22.6 மி.மீட்டரும் மழை பதிவாகியிருந்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இந்த மழை நாகா்கோவில் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக காணப்பட்டது. கடும் வெப்பத்திற்கிடையே பெய்து வரும் சாரல் மழை, மாவட்டத்தில் விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.