பெண் மீது தாக்குதல்: இருவா் கைது
மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, ஒற்றிவிளையைச் சோ்ந்தவா் உஷா (48). இவருக்கும் திக்குறிச்சி மாதிக்காவிளையைச் சோ்ந்த சஜின் (37), சஜூ (35) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் இருநாள்களுக்கு முன் உஷாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவதூறாகப் பேசியதுடன் அவரை கம்பால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த உஷா, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து சஜின், சஜூ ஆகிய இருவரையும் கைது செய்தனா்.