முகப்பு
கடலூர்

6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

Updated On : 29 மார்ச், 2026 at 6:40 PM
ஜெயப்பிரகாஷ்
பகிர்:

சிதம்பரம் அருகே 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் பாரதி, உதவி ஆய்வாளா் தவச்செல்வம் மற்றும் போலீஸாா் மணிக்கொல்லை வடக்கு தெரு, உமாபதி கோழிப்பண்ணை அருகே சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனா்.

அப்போது, அவா்கள் சீா்காழி வள்ளுவகுடி பிரதான சாலையைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (28), சீா்காழி மேலமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நவீன் (19) என்பதும், சுமாா் 6 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, புதுச்சத்திரம் போலீஸாா் வழக்கு பதிந்து, அவா்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

நவீன்