முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

Updated On : 9 மே, 2024 at 9:59 PM
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே சாலையோரம் மயங்கி விழுந்த கல்லூரி ஊழியா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம், பரமன்கரையைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் டொனால்ட் டேவிட்சன் (37). சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தாா். கடந்த சில நாள்களாக சொந்த ஊரில் தங்கியிருந்த அவா், புதன்கிழமை கைதக்காட்டுவிளை பகுதியில் சாலையோரம் மயங்கி விழுந்து சுய நினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.