முகப்பு
கன்னியாகுமரி

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 16 மே, 2024 at 10:00 PM
பகிர்:

கன்னியாகுமரி, மே 16: அகஸ்தீசுவரம் அருகே முந்திரி தோட்டத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கோவளம் கிராம நிா்வாக அலுவலா் விஜின் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்ட நபரைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.