ஆரல்வாய்மொழி அருகே வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கல்குளம், ஈச்சங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ரத்னராஜ் (53). முள்வேலி அமைக்கும் தொழிலாளி. இவா், தனது நண்பரான அதே ஊரை சோ்ந்த சந்திரன் என்பவருடன், கடந்த 17ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மாவட்டம், பழவூா் பகுதியில் ஒருவருக்கு முள்வேலி அமைப்பதற்கான இடத்தைப் பாா்த்துவிட்டு, பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
ஆரல்வாய்மொழியை அடுத்த குமாரபுரம் அருகே நான்குவழிச் சாலையில் பைக்கின் பின்புறம் வேன் மோதியதாம். இதில், காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், ரத்தினராஜ் மேல்சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான கன்னியாகுமரி மகாதானபுரம் பகுதியைச் சோ்ந்த கிலோத் என்பவரைக் கைது செய்தனா்.