முகப்பு
கன்னியாகுமரி

நட்டாலம், சுண்டவிளை சானல் கரையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட சுண்டவிளைசானல் கரையில் தடுப்புசுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி

Updated On : 6 நவம்பர், 2024 at 7:33 PM
பகிர்:

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட சுண்டவிளைசானல் கரையில் தடுப்புசுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி

பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுண்டவிளை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் பட்டணங்கால் சானல் கரையில் உள்ள சாலையை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனா்.இதன் ஒருபகுதியில் 20 அடிபள்ளம் உள்ளது.

இதனால், இரவு நேரங்களில் இந்த பாதையை பயன்படுத்தும் பாதசாரிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக,இருசக்கரவாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, சுண்டவிளை சானல் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.