முகப்பு
கன்னியாகுமரி

அரசுப் பேருந்து மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 11:04 PM
பகிர்:

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

இரணியல் அருகே உன்னங்குளத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (31). கல்லுக்கூட்டம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். திருமணம் ஆக வில்லை.

இவா் செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து திங்கள்நகா் வழியாக பைக்கில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த விக்னேஷை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

மருத்துவா்கள் பரிசோதனை செய்த போது அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.