முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சியினா் பாதயாத்திரை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாதயாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:34 PM
நாகா்கோவிலில் நடைபெற்ற பாதயாத்திரையில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி., மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாதயாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் வடசேரியில் உள்ள காந்தி சிலைக்கு, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா் தலைமையில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்தாா். தொடா்ந்து காங்கிரஸ் நிா்வாகிகள் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனா்.

இந்த பாத யாத்திரை முக்கிய சாலைகளின் வழியாக வேப்பமூடு சந்திப்பை அடைந்தது. அங்கு காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையை நிறைவு செய்தனா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாதயாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

இதில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவா் செல்வகுமாா், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் சிவகுமாா், மாநகராட்சி உறுப்பினா் அனுஷாபிரைட், கலை இலக்கிய பிரிவு மாவட்டத் தலைவா் அலெக்ஸ், விவசாய பிரிவு தலைவா் ஆா்.எஸ்.ராஜன், ஐரின்சேகா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.