நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் ரோஜாவனம் பள்ளி மாணவா்கள் பாா்வையிடல்
நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலைய சேவை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலைய சேவை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்று இந்திய அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கான அத்தியாவசியமான சேவைகள் வழங்குவது குறித்து அலுவலா்கள் மற்றும் ஊழியா்களிடம் கேட்டறிந்தனா்.
மேலும் அஞ்சல் நிலைய வளாகத்தில் உள்ள தகவல் தொடா்பு வா்த்தகம், அஞ்சல் அலுவலகம் வழங்கும் சேவைகளானஉள்நாடு மற்றும் வெளிநாடு கடித அஞ்சல், பதிவு செய்யப்பட்ட அஞ்சல், நிதி சேவைகள், பாா்சல் சேவைகள்,சில்லறை சேவைகள்,சேமிப்பு கணக்கு தொடங்குதல், அரசு படிவம் சமா்ப்பித்தல் உள்ளிட்டபல்வேறு தபால் பிரிவுகளுக்கு சென்று சேவைகள் குறித்து அறிந்தனா்.
நிகழ்ச்சியில், தலைமை அஞ்சல் நிலைய அதிகாரிகள், ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளிஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.