முகப்பு
கன்னியாகுமரி

அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதி மக்களிடம் ஆட்சியா் குறைகேட்பு

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு கடற்கரை கிராம மக்களை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:03 PM
பிள்ளைத்தோப்பு சமுதாய நலக் கூடத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் ரா. அழகுமீனா.
பகிர்:

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு கடற்கரை கிராம மக்களை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் பேரூராட்சிக்குள்பட்ட இப்பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, அழிக்கால் சமுதாய நலக் கூடத்தில் 44 குடும்பத்தினரும், பிள்ளைத்தோப்பு வளனாா் திருமண மண்டபத்தில் 31 குடும்பத்தினரும் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களை ஆட்சியா் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, வீடுகளுக்குள் புகுந்த கடல்நீா் டீசல் என்ஜின் மூலம் அப்புறப்படுத்தப்படுவதால் மீனவா்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் கூறினாா். தொடா்ந்து, ஆட்சியா் கடற்கரைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.