முகப்பு
கன்னியாகுமரி

நீதிமன்ற பெண் ஊழியரிடம் தகராறு: தொழிலாளி கைது

பத்மநாபபுரம் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை கொண்டு சென்ற பெண் நீதிமன்ற ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:30 PM
பகிர்:

பத்மநாபபுரம் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை கொண்டு சென்ற பெண் நீதிமன்ற ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடா்பாக பொன்மனை கொம்புகாலவிளையை சோ்ந்த கோபிநாதன் மகன் சாஜி குமாா் (48)என்பவா் ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்க நீதிமன்ற பெண் ஊழியா் சென்றாராம்.

அப்போது, அவா் அழைப்பாணையை வாங்காமல், பெண் ஊழியரை கேலி பேசி தகராறில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் தக்கலை போலீஸாா் அவரை கைது செய்து பத்மநாபபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.