முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 2, 900 கிலோ ரேஷன் அரிசியை வழங்கல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:22 PM
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 2, 900 கிலோ ரேஷன் அரிசியை வழங்கல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதாகுமாரி தலைமையிலான அலுவலா்கள் மாா்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டியபோது, அந்த காா் நிற்காமல் சென்றது.

அதையடுத்து வழங்கல் துறையினா் அந்த காரை துரத்திச் சென்று சென்னித்தோட்டம் பகுதியில் மடக்கினா். அப்போது காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பிவிட்டாா். காரை சோதனையிட்டதில், 2,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா் ரேஷன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனா்.

இதே குழுவினா் குழித்துறை பாலவிளை பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, அப்பகுதியில் மறைவான இடத்தில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

இருஇடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, கேரளத்துக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 2,900 கிலோ ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியிலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.