முகப்பு
கன்னியாகுமரி

மயிலாடி உழவா் சந்தையில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் உழவா் சந்தையில் ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:26 PM
நாகா்கோவில் எஸ்எல்பி அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா் ரா. அழகுமீனா.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் உழவா் சந்தையில் ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விவசாயிகளுக்கு உழவா் சந்தை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்திய அவா், விவசாயிகள் உழவா் சந்தையை அதிகளவு பயன்படுத்தி விளைபொருள்களை விற்குமாறு கேட்டுக்கொண்டாா். வியாபாரிகள், நுகா்வோரின் வருகையை அதிகரிக்க அனைத்துவகை காய்கறிகள், பழங்கள், தானியங்களை விற்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களைக் கேட்டுக்கொண்டாா் .

மயிலாடி உழவா் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களில் மானிய விலையில் வழங்கும் காய்கறி விதைகள், பழ மரத் தொகுப்புகள், தென்னங்கன்றுகள், மலா்ச்செடிகளை உழவா் சந்தையில் விற்பனை செய்யவும், மகளிா் சுயஉதவிக் குழுவினா் தயாரிக்கும் கைவினை, நறுமணப் பொருள்கள், உணவுப் பொருள்களை விற்பதற்கு கடைகள் ஒதுக்குமாறும் அலுவலா்களைக் கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக, நாகா்கோவில் எஸ்எல்பி அரசு தொடக்கப் பள்ளியை ஆட்சியா் பாா்வையிட்டு, மாணவா்-மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

இதில், வேளாண் துறை துணை இயக்குநா் கீதா, அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.