முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் அரணமனையில் எளிய முறையில் ஓணம் விழா

Updated On : 8 செப்டம்பர், 2024 at 8:48 PM
பகிர்:

தக்கலை, செப். 8: தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில்

ஓணம் விழா அண்மையில் தொடங்கியது.

கேரள மாநில தொல்பொருள் ஆய்வுத்துறையின்கீழ் உள்ள

Advertisement

பத்மநாபபுரம் அரண்மனையில், ஆண்டுதோறும் ஓணம் விழா 10 நாள்கள் கொண்டாடப்படும். வயநாடு பேரிடா் சம்பவத்தையடுத்து, நிகழ் ஆண்டில் கேரள அரசு சாா்பில் நடத்தப்படும் ஓணம் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. பத்மநாபபுரம் அரண்மனை தமிழக பகுதியில் இருப்பதால், அரண்மனை ஊழியா்களால் எளிய முறையில்

ஓணம் விழா கொண்டாடப்படுகிறது.

மலையாள அத்தம் நட்சத்திர நாளான வெள்ளிக்கிழமை ஓணம் விழா தொடங்கியது. இதையொட்டி அரண்மனை வளாகத்தில்

ஊழியா்கள் அத்தப்பூ கோலமிட்டனா். அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனா். அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓண ஊஞ்சலில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் ஆடி மகிழ்ந்தனா்.

அரண்மனை அதிகாரி சது மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments