முகப்பு
கன்னியாகுமரி

பேரவைத் தொகுதி அறிமுகம்! பத்மநாபபுரம்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

Updated On : 23 மார்ச், 2026 at 11:53 PM
பத்மநாபபுரம் அரண்மனை. - கோப்புப் படம்
பகிர்:

தொகுதி எண் 232

வாக்காளர்கள்

ஆண்கள் - 1,16,895

பெண்கள் - 1,17,142

மூன்றாம் பாலினத்தவர் - 19

மொத்தம் 2,34,056

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமான பத்மநாபபுரத்தை மையமாகக் கொண்டுள்ளது.

திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய பத்மநாபபுரம் அரண்மனை இத்தொகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளம். தென்னகத்தின் வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், குமரி குற்றாலம் எனப்படும் திற்பரப்பு அருவி, ஆசியக் கண்டத்தில் நீளமானதும் உயரமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம் ஆகியவை இங்குள்ளன.

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் புகழ்பெற்ற 12 சிவாலய ஓட்டத் திருத்தலங்களுள் திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம் கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப் பன்னியோடு ஆகிய 9 கோயில்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.

திருவிதாங்கோட்டில் புனித தோமா கட்டிய அரப்பள்ளி எனப்படும் புனித மேரி பாரம்பரிய ஆலயம், தக்கலை அருகே புலியூர்குறிச்சி முட்டிச்சான்பாறை தேவசகாயம் பிள்ளை திருத்தலம், தக்கலை ஞானமாமேதை பீர்முகமது தர்கா ஆகியவையும் முக்கிய அடையாளங்கள்.

கோதையாறு, பரளியாறு, வள்ளியாறு பாயும் இத்தொகுதியில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் உள்ளன. மலைகள், வனப்பகுதிகள் அதிகமுள்ள இங்கு ரப்பர், வாழை, தென்னை, அன்னாசி, கிராம்பு, மிளகு ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும்.

பெரும்பான்மையோர் வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்தவ நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையினராகவும், இந்து நாடார், நாயர், கிருஷ்ண வகையினர், இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர் கணிசமான எண்ணிக்கையிலும் உள்ளனர்.

பல்வேறு சிறுபான்மை ஜாதியினர், மலைவாழ் பழங்குடி சமூகத்தினரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.

பத்மநாபபுரம் தொகுதி திருவட்டாறு தொகுதியாக இருந்தபோது 2007 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது திருவட்டாறின் பெரும்பான்மை பகுதிகள் பத்மநாபபுரத்துடன் இணைக்கப்பட்டன.

அமைச்சர் தொகுதி: இங்கு 2016 பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ் 76,249 வாக்குகள் பெற்று வென்றார். 2021 இல் 87,744 வாக்குகள் பெற்று வென்ற அவர், பால்வளத் துறை அமைச்சராக உள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இங்கு 1,16,895 ஆண்கள், 1,17,142 பெண்கள், 19 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,34,056 வாக்காளர்கள் உள்ள னர்.

கோரிக்கைகள்: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தும் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. திருவட்டாறு வட்டம் உருவாகியும் நீதிமன்றம், கருவூ லம் அமைக்கப்படவில்லை.

குலசேகரம் அரசு மருத்துவமனை வட்ட மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டாலும் கூடுதல் மருத்துவர்கள் நியம னம், நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை வசதிகள் இது வரை கிடைக்கவில்லை.

ரப்பர் உற்பத்தி அதிகமுள்ள நிலையில், அதை மூலப் பொரு ளாகக் கொண்டு ரப்பர்பொருள்கள் தயாரிக்கும் அரசு ஆலை கள் உருவாக்கப்படவில்லை.

வாழை, அன்னாசி போன்றவற்றை மதிப்புக் கூட்டி விற் பனை செய்யும் தொழில்களும் முழு அளவில் ஏற்படுத்தப்பட வில்லை.

தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் வரைமுறை செய்யப்பட்ட தனியார் ரப்பர் விவசாயிகளின் நிலங்களுக்கு அந்தச் சட்டத்தின் பிடியிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்காமலிருப்பது பெரும் சோகம்.

வருவாய் கிராமங்கள் மலையிடப் பாதுகாப்புக் குழு இப்பகுதிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதும், சூழியல் அதிர்வு தாங்கு மண்டலங்களாக வரையறை செய்துள்ளதும் விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கின்றன.

வன விலங்குகளால் தொடர்ந்து பயிர் சேதம் ஏற்படுவதால் மலையோரப் பகுதி விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளி யேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் குடியிருப் புகளில் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ள வன விலங்குகளின் தொல்லைகளுக்கு தீர்வு இல்லை. பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றியுள்ள கற்கோட்டை சேதமடைந்து வரும் நிலையில், அதைச் சீரமைக்கும் பணியும் கிடப்பில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.