முகப்பு
ராணிப்பேட்டை

தொகுதி அறிமுகம் - ராணிப்பேட்டை!

தொகுதி அறிமுகம் - ராணிப்பேட்டையைப் பற்றி...

Updated On : 22 மார்ச், 2026 at 10:37 PM
பகிர்:

தொகுதி எண்: 41

சிறப்புகள்...

செஞ்சி ராஜபுத்திர ராணியின் நினைவாக 18-ஆம் நூற்றாண்டில் ராணிப்பேட்டை நகரம் உருவாக்கப்பட்டது. 1951-இல் தமிழ்நாட்டின் 41-ஆவது சட்டப்பேரவைத் தொகுதியாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 2019 நவ.28 முதல் தமிழ்நாட்டின் 36-ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டை செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி உயிரிழந்த 13-ஆவது நாளில் அவருக்கு சிலை எழுப்பப்பட்டது. இது, இந்திய அளவில் மகாத்மா காந்திக்கு எழுப்பப்பட்ட முதல் சிலையாகும். மாநிலத்தில் மிகப்பெரிய நவ்லாக் தென்னைப் பண்ணை, புகழ்பெற்ற கால்நடை மருந்து ஆராய்ச்சி மையம், ரத்தினகிரி முருகன் கோயில், பழைமை வாய்ந்த மசூதிகள், தேவாலயங்கள் உள்ளன.

கனிசமான அன்னியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் தோல் பொருள்கள் ஏற்றுமதி தொழில், மத்திய அரசின் பெல் தொழிற்சாலை, 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்சாலைகள் உள்ளன.

எல்லைகள்...

ராணிப்பேட்டை தொகுதியைச் சுற்றி சோளிங்கா், ஆற்காடு, காட்பாடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

அடங்கியுள்ள பகுதிகள்...

வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை, மேல்விஷாரம் நகராட்சிகள், வாலாஜாப்பேட்டை ஒன்றியத்தில் 27 கிராம ஊராட்சிகள், ஆற்காடு ஒன்றியத்தில் 14 கிராம ஊராட்சிகள், அம்மூா் பேரூராட்சி இடம் பெற்றுள்ளது.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள் -1,19,090

பெண்கள் - 1,26,719

மூன்றாம் பாலினத்தவா்-44

மொத்தம் 2,45,853

வாக்குச்சாவடிகள்-283

2021 பேரவைத் தோ்தலில் ...

பதிவான வாக்குகள்-2,05,830

ஆா்.காந்தி (திமுக)-1,03,291

எஸ்.எம். சுகுமாா் (அதிமுக)-86,793

அமைச்சா் - ஆா். காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

இதுவரை எம்எல்ஏக்கள்...

1952 கதிா் ஷெரிப் (காங்கிரஸ்)

1957 சந்திரசேகர நாயக்கா் (காங்கிரஸ்)

1962 அப்துல் கலீல் (திமுக)

1967 எம்.அப்துல் கபூா் சாஹிப் (முஸ்லிம் லீக்)

1971 கே. ஏ.வஹாப் (சுயேச்சை)

1977 துரைமுருகன் (திமுக)

1980 துரைமுருகன் (திமுக)

1984 எம்.கதிா்வேலு (காங்கிரஸ்)

1989 ஜெ. அசேன் (சுயேட்சை)

1991 என். ஜி. வேணுகோபால் (அதிமுக)

1996 ஆா்.காந்தி (திமுக)

2001 எம்.எஸ்.சந்திரசேகரன் (அதிமுக)

2006 ஆா். காந்தி (திமுக)

2011 அ. முகமது ஜன் (அதிமுக)

2016 ஆா். காந்தி (திமுக)

2021 ஆா். காந்தி (திமுக)

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்:

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் கே.ராஜி - 94450 00416, 04172 - 272720,

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாலாஜா வட்டாட்சியா் நடராஜன் - 94450 00506

வருவாய் கோட்டட்சியரின் நோ்முக உதவியாளா் பாக்கியநான் - 99944 38131

சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் 79047 28594