FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Updated On : 20 ஜூலை 2026, 9:10 am IST
திருத்தணி - file photo
பகிர்:

ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2026ஆம் ஆண்டு, ஆடிக் கிருத்திகை விழா, ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கிறது.

தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, திருத்தணி முருகன் கோயிலில் அன்றைய தினம் சிறப்பான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.

Advertisement

Advertisement

எனவே, ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆடிக் கிருத்திகை நாளில், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும். ஏராளமான மக்கள் அன்றைய தினம் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.

summary

Local holiday announced for Thiruvallur district!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments