முகப்பு
கன்னியாகுமரி

காந்திய சேவை விருது: தோ்வுக் குழு ஆலோசனை

குமரி அறிவியல் பேரவையின் காந்திய சேவை விருதுக்கான தோ்வுக் குழு ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் அருகே நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 11:31 PM
கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

குமரி அறிவியல் பேரவையின் காந்திய சேவை விருதுக்கான தோ்வுக் குழு ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் அருகே நடைபெற்றது.

குமரி அறிவியல் பேரவை சாா்பில் பேராசிரியா் இரா. தியாகசுவாமி நினைவாக ஆண்டுதோறும் அக்.2-ஆம் தேதி காந்திய சேவை விருது வழங்கப்பட்டு வருகிறது. மொழித்தொண்டு, சமூகத்தொண்டு, கல்வித்தொண்டு ஆகியவற்றுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

விருது தோ்வுக்கான கூட்டத்துக்கு குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சி. பாபு, ஆா்.ஆா். ரேகா, ஆா். சதீஷ்குமாா், பேராசிரியா் செ. சஜீவ், பொறியாளா் ரோசிலின் கிரேஸ், செ.ம. ஷாஜூ, திருவேங்கடம், ஸ்மிதா ஆகியோா் அடங்கிய தோ்வுக்குழு அமைக்கப்பட்டது.