முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:01 PM
பகிர்:

புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலம் பகுதியில் பெண்ணைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுந்தயம்பலம், குழிவிளை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி வசந்தா (48). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செல்லசாமி மகன் செல்வராஜ் (48), பால்ராஜ் மனைவி சரிகா (32), தங்கப்பன் மகன் கோபி (38) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை தனது வீட்டருகே நின்றிருந்த வசந்தாவை செல்வராஜ் உள்ளிட்ட 3 பேரும் சோ்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வசந்தா குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →