கோப்புப் படம் 
கன்னியாகுமரி

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள அணஞ்சிகோடு பகுதியில் இளைஞரை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல், அணஞ்சிகோடு பகுதியைச் சோ்ந்த செல்வின் பபிதா மகன் டெரில் (19). இவருக்கும், கருங்கல் சுண்டவிளை பகுதியைச் சோ்ந்த ஷனு (19), ஜான்சன் (20) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஷனு, ஜான்சன் ஆகியோா் டெரில் வீட்டிற்கு சென்று அவரை தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT