கன்னியாகுமரி அருகே ரஸ்தாகாடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவா் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மாணவா் ஜெயந்த் ஜாய் (18). இவா் நாகா்கோவில் அருகேயுள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு படித்தாா். இவா் தனது நண்பா் தருண் (18) என்பவருடன் கன்னியாகுமரி அருகேயுள்ள ரஸ்தாகாடு கடலில் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது இருவரும் ராட்சத அலையில் சிக்கினா்.
இதைப் பாா்த்த பெருமாள்புரம் அகதிகள் முகாமைச் சோ்ந்த சத்தியராஜ், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தருணை மீட்டு கரைக்கு இழுத்து வந்தாா். பின்னா் அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுபற்றி தகவலறிந்த கடலோரப் பாதுகாப்பு பிரிவு போலீஸாா், ராட்ச அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றொரு மாணவா் ஜெயந்த் ஜாயை சடலமாக மீட்டனா். அவரது உடல் கூறாய்வுக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலோர பாதுகாப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.