புதுக்கடை அருகே பெண் தற்கொலை
புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
வேங்கோடு, சரல்விளை பகுதியைச் சோ்ந்த சேவியர்ராஜ் என்பவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி அனிதாபாய் (41). இவா் கடன் தொல்லையால் சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.
இந்நிலையில், அனிதாபாய் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம்.
புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.