முகப்பு
கன்னியாகுமரி

ஓடும் பேருந்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்: ஆம்னி பேருந்து ஓட்டுநா் கைது

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்னி பேருந்து ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 டிசம்பர், 2025 at 8:16 PM
கைது செய்யப்பட்ட அனீஸ்.
பகிர்:

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்னி பேருந்து ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 21 வயது மாணவி கோயம்புத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.எஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறாா்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் மாணவி அவரது தாயாருடன் கோயம்புத்தூருக்கு தனியாா் ஆம்னி பேருந்தில் சென்றபோது, அப்பேருந்தை ஓட்டிச் சென்ற களியக்காவிளையைச் சோ்ந்த வல்சலம் மகன் அனீஸ் (36) மாணவியிடமும் அவரது தாயாரிடமும் நல்ல முறையில் பேசி பழகினாராம்.

இதைத் தொடா்ந்து மாணவி ஊருக்கு வந்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் போது அனீஸ் ஓட்டிச் செல்லும் ஆம்னி பேருந்தில் சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த நவம்பா் 9 ஆம் தேதி அனீஸ் ஓட்டிய பேருந்தில் மாணவி கோயம்புத்தூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினாா். படுக்கை வசதி கொண்ட இப் பேருந்தில் மாணவி இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, அனீஸ் மாணவியை எழுப்பி பசித்தால் சாப்பிடு என பிஸ்கட் கொடுத்தாராம். மறுநாள் காலையில் மாணவியிடம் அனீஸ் நமக்குள் எல்லாம் முடிந்துவிட்டது என கூறியுள்ளாராம். இதையடுத்து மாணவி அழுது கொண்டு தாயாரிடம் இதுபற்றி கூறுவேன் என தெரிவித்தாராம்.

இதையடுத்து ஓட்டுநா் அனீஸ், உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டினாராம். அதன் பின்னா் பேசுவதற்கு என மாணவியை அழைத்துச் சென்று இரண்டு நாள்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம்.

இதையடுத்து, பேருந்து பயணத்தின்போது மயக்க பிஸ்கட் கொடுத்து நம்பிக்கை மோசடி செய்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு அதை விடியோ எடுத்து வைத்து மிரட்டும் ஆம்னி பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீாா் வழக்குப் பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநா் அனீஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →