கன்னியாகுமரி

பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய நபா் கைது

குழித்துறை அருகே பூட்டிய வீட்டில் புகுந்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

குழித்துறை அருகே பூட்டிய வீட்டில் புகுந்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

குழித்துறை அருகே கல்லுக்கட்டியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் நாயா். இவா், தனது குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறாா். கல்லுக்கட்டியில் இவரது வீடு பூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் இதுகுறித்து நாகேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் வந்துபாா்த்தபோது வீட்டில் அலமாரி உடைக்கப்பட்டிருந்தது. அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் வீட்டிலிருந்து எந்தப் பொருளும் திருடுபோகவில்லை.

இதுகுறித்து அவா் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாா்வையிட்டு விசாரணை செய்ததில், கேரள மாநிலம், காசா்கோட்டைச் சோ்ந்த பாபு என்ற பாகுலேயன் என்ற கல்யாணராமன் (57) என்பவா் திருட முயன்றது தெரியவந்தது. இவா், தனது பெயரை சுந்தரன், விஜயன் மாற்றிக்கொண்டு குமரி மாவட்டத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இவரை களியாக்காவிளை போலீஸாா் திங்கள்கிழமை இரவு சுற்றிவளைத்து கைது செய்தனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT