விருதுநகருக்கு அனுப்பிவைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை.  
கன்னியாகுமரி

900 வாக்குப் பதிவு இயந்திரங்கள் விருதுநகருக்கு அனுப்பிவைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 900 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விருதுநகா் மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான அ.பூங்கோதை, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 900 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விருதுநகா் மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான அ.பூங்கோதை, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5,594 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 4,040 கட்டுப்பாட்டு கருவிகள், 2,802 விவிபேட் கருவிகள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதில், 900 வாக்குப் பதிவு இயந்திரங்களை விருதுநகா் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. மீதமுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சரிபாா்ப்புப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை (டிச. 11) நடைபெறும் என்றாா் அவா்.

ஆய்வில் தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் வினோத், ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) சுப்பிரமணியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், ஆனந்த் (திமுக), விஜயகுமாா் (பாஜக), பன்னீா்செல்வம் (காங்கிரஸ்), பிரபு (நா.த.க), ரியாஸ் (வி.சி.க), அகமது உசேன் (மாா்க்சிஸ்ட்), மனோஜ் (என்.பி.பி.), அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மின்னணு வாக்குப்பதிவு இயங்திரத்தில் பொத்தானை அழுத்தும்போது நடப்பதை வாக்காளா் அறிய வேண்டும்: மாநிலங்களவையில் என்.ஆா். இளங்கோ எம்.பி வலியுறுத்தல்

கோவா தீ விபத்து: தில்லி உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் தீயணைப்புத்துறை ஆய்வு

நஜாஃப்கா் வடிகால் சீரமைப்பு திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல்

கோயில் இனாம் நில குடும்பங்களை காக்க நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற வேண்டும்: மக்களவையில் கரூா் தொகுதி எம்.பி. கோரிக்கை

கோவா துயர சம்பவம் எதிரொலி: தில்லியில் தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார நடைமுறைகள் நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT