கன்னியாகுமரி

‘நுள்ளிவிளையில் பழைய பால இடத்தில் புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும்’

Syndication

நுள்ளிவிளையில் பழைய ரயில்வே பாலத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய பாலத்தை விஸ்தரித்து கட்ட வேண்டும் என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நுள்ளிவிளையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டம் திங்கள் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சி - இயற்கை வளங்கள் பாதுகாப்புப் பேரவைத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். திமுக மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் ஜோசப் ராஜ், இரணியல் பேரூா் திமுக செயலாளா் சுப்பிரமணியன், மாவட்ட ஜனதா தள தலைவா் அருள்ராஜ் ஆகியோா் முன்னிலை வைத்தனா். மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் அமைப்பாளா் ஜெரால்டு கென்னடி, திங்கள்நகா் வா்த்தக நலச் சங்கச் செயலா் செல்வராஜ், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் கிருஷ்ணன் குட்டி, நுள்ளிவிளை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவனந்தபுரம் - நாகா்கோவில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், தோட்டியோடு, திங்கள்நகா், புதுக்கடை மாநில நெடுஞ்சாலையில் நுள்ளிவிளை பகுதியில் ஏற்கெனவே ஒற்றை வழித்தடத்தில் உள்ள பாலத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் விரிவாக புதிய மேம்பாலம் கட்டுவதற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பாலம் கட்டும்போது, இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் குதிரை பந்தி விளை வழியாக வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், இல்லையெனில், அரசியல் கட்சிகள், பொது மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT