கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தீக்காயமுற்ற முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள பொத்தையான்விளை பகுதியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

புதுக்கடை அருகே உள்ள பொத்தையான்விளை பகுதியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பொத்தியான்விளைப் பகுதியை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஜோஸ் (44). இவரது மனைவி பிரபா(41). இத்தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், ஜோஸ் தனது பைக்கை தீவைத்து எரிக்க முயன்றாராம். அப்போது, அவா் மீது தீ பற்றியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT