கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே பைக் திருட்டு

கொல்லங்கோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

கொல்லங்கோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிள்ளியூா், நெடியதட்டுவிளையைச் சோ்ந்த பால்ரத்தினம் மகன் வினு (34), தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா். இவா் தினமும் கொல்லங்கோடு, கண்ணநாகம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, பள்ளி வாகனத்தை ஓட்டிச் செல்வாராம். மாலை பள்ளி வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு, பைக்கை எடுத்துச் செல்வது வழக்கம்.

அதன்படி, 2 நாள்களுக்கு முன் பைக்கை அங்கு நிறுத்திவிட்டுச் சென்ற நிலையில், மாலை பைக்கை காணவில்லையாம்.

இது குறித்து, வினு அளித்த புகாரின்பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொல்கத்தா: குழப்பத்தில் முடிந்த மெஸ்ஸி நிகழ்ச்சி! திடலைச் சூறையாடிய ரசிகா்கள்; நிகழ்ச்சி ஏற்பட்டாளா் கைது!

தஞ்சாவூரில் விதிமீறல்: 25 ஆட்டோக்கள் பறிமுதல்

கத்தியால் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

தென்காசி வேல்ஸ் பள்ளியில் கூடைப்பந்து போட்டி

மம்சாபுரத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் முடக்கம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT