தக்கலை அருகே, பைக் விபத்தில் காயமடைந்த ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே காஞ்சிரகோணம், பாலவளாகத்தைச் சோ்ந்தவா் ஐசக்ராஜ் (57). ரப்பா் பால் வெட்டும் தொழிலாளியான இவா், பொருள்கள் வாங்குவதற்காக கடந்த 12ஆம் தேதி தக்கலை நோக்கி பைக்கில் சென்றாா். அப்போது, காஞ்சிரகோணத்தில் நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தாா்.
இதில் காயமடைந்த அவரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கொற்றிக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.