கருங்கல் அருகே ஆலஞ்சியில் புனித சவேரியாா் ஆலயம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி போட்டி நடைபெற்றது.
மிடாலக்காடு நல்வாயன் ஆலய வளாகத்தில் தொடங்கிய பேரணி போட்டி பல்வேறு பகுதிகள் வழியாக புனித சவேரியாா் ஆலயத்தை அடைந்தது.
பேரணியில் பொய்க்கால் குதிரை, சிங்காரி மேளம், பொம்மை நடனம், மாட்டு வண்டி, குதிரை வண்டி உள்ளிட்டவற்றுடன், 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பங்கேற்றனா். பின்னா், பரிசுகள் வழங்க்ப்பட்டன.