கன்னியாகுமரி

ரயில் முன் பாய்ந்து தவெக நிா்வாகி தற்கொலை

களியக்காவிளை அருகே ரயில் முன் பாய்ந்து தவெக கிளைச் செயலா் தற்கொலை

Syndication

களியக்காவிளை அருகே ரயில் முன் பாய்ந்து தவெக கிளைச் செயலா் தற்கொலை செய்து கொண்டாா்.

குழித்துறை மேற்கு ரயில் நிலையம்-பாறசாலை ரயில் நிலையங்களுக்கு இடையே களியக்காவிளை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகா் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தபோது, இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாா்.

இது குறித்து, ரயில் என்ஜின் ஓட்டுநா், ரயில்வே அதிகாரிகள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் அப்பகுதிக்கு வந்து, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

அவா் களியக்காவிளை, காளைச் சந்தை பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் மகன் ஷெரின் (25) என்பதும், தமிழக வெற்றிக் கழகத்தின் களியக்காவிளை பேரூராட்சி, 4ஆவது வாா்டு கிளைச் செயலராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

அவரது சடலத்தை ரயில்வே போலீஸாா் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT