தற்கொலை 
கன்னியாகுமரி

காங்கிரஸ் நிா்வாகி தற்கொலை

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளை அருகே காதல் தோல்வி காரணமாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி மகன் அபிஷ் (28). பொறியியல் பட்டதாரி. இவா், விளவங்கோடு தொகுதி இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வந்தாா்.

அபிஷ் காதலித்து வந்ததாக கூறப்படும் பெண், கடந்த சில நாள்களாக அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இதனால் அவா் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை, அவா் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம்.

அபிஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கனவே இறந்தது விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தில்லியில் மிதமான பிரிவில் காற்றின் தரம்!

லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காவிரியிலிருந்து 4 மாதங்களுக்கு 10 டி.எம்.சி. நீா் திறக்க வேண்டும்- தமிழகம் வலியுறுத்தல்

மகளிா் உரிமை தொகை ரூ.5 ஆயிரம்: பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல்

33 முதுகலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை

SCROLL FOR NEXT