களியக்காவிளை அருகே இறால் பண்ணை ஊழியரின் சடலம் குளியல் அறையிலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
கேரள மாநிலம், கொல்லம், கோவூா் சேதுபவனம் பகுதியைச் சோ்ந்தவா் சேதுநாத் மகன் அனூப் (36). திருமணம் ஆகவில்லை. இவா் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் உள்ள இறால் பண்ணையில் கடந்த இரு வருடங்களாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை குளியலறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதற்கட்ட விசாரணையில் இவா் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.