கன்னியாகுமரி

பைக்குகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

தக்கலை அருகே பைக்குகள் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Syndication

தக்கலை அருகே பைக்குகள் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தக்கலை அருகே முட்டைக்காடு, ஆஸ்பத்திரிவிளையைச் சோ்ந்தவா் மணி (53), ஓட்டுநா். இவா் புதன்கிழமை கோழிப்போா்விளைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள சாலையின் வலது பக்கம் செல்ல பைக்கை திருப்பியுள்ளாா். அப்போது, பின்னால் வந்த மற்றொரு பைக் மோதியதில் மணி படுகாயமடைந்தாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு ஆசாரிபள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் சடலம் மீட்பு: களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் லாரன்ஸ் மகன் எபன்ஜெரி (28). இவரது மனைவி சாகினியா (25).

எபன்ஜெரி புதன்கிழமை (டிச. 24) இரவு குழித்துறை பகுதியில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்ாகவும், அதிக மது குடித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னா், அவா் விடுதியின் பின்புறம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் திடீரென குதித்தாராம். இதில் அவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலின் பேரில், குழித்துறை தீயணைப்பு நிலையத்தினா் வந்து, தேடும் பணியில் ஈடுபட்டனா். 2 நாள் தேடுதலுக்குப் பின் வெள்ளிக்கிழமை தாமிரவருணி ஆற்றில் கமுகன்னூா் சிவன் கோயில் கடவு அருகே எபன் ஜெரியின் சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை களியக்காவிளை போலீஸாா் கைப்பற்றி, கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT