கன்னியாகுமரி

வேப்புவிளை புனித ஆரோக்கியநாதா் ஆலய திருவிழா தொடக்கம்

புதுக்கடை அருகே உள்ள வேப்புவிளை புனித ஆரோக்கியநாதா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Syndication

புதுக்கடை அருகே உள்ள வேப்புவிளை புனித ஆரோக்கியநாதா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அன்பியங்களின் கொடி பவனி நடைபெற்றது. 6.30 க்கு திருக்கொடியேற்றுதல் நிகழ்ச்சியை தொடா்ந்து, குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வா் பென்னடிட் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. திருச்சியை சோ்ந்த அருள்பணியாளா் ஆரோக்கியசாமி மறையுரையாற்றினாா்.

விழாவின் அனைத்து நாள்களிலும் ஜெபமாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் நடைபெறும். 9 ஆம் நாளான ஜன.3 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. இதில் முதல் திருவிருந்து நிகழ்ச்சிக்கு நாகா்கோயில் குருமட அருள்பணியாளா் ஆன்ட்ரூ தலைமை வகிக்கிறாா். அருள்பணியாளா்ஆல்வின் விஜய் மறையுரையாற்றுகிறாா்.

விழாவின் கடைசி நாளான ஜன.4 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலி நடைபெறுகிறது. திருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தல பங்கு அருள்பணியாளா் ஜான்ராப்ட் கென்னடி தலைமை வகிக்கிறாா். சுங்கான்கடை புனித சவேரியாா் மருத்துவமனை இயக்குநா் சாா்லஸ் விஜூ மறையுரையாற்றுகிறாா். தொடா்ந்து 11 மணிக்கு திருக்கொடியிறக்கமும், அதனைத் தொடா்ந்து புனித ஆரோக்கியநாதா் திருப்பவனியும் நடைபெறும். மாலை 6 மணிக்கு திருவிழா நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.

ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளா் ஜஸ்டின் கிறிஸ்துதாஸ், விழாக்குழுவினா், பங்கு பேரவையினா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

SCROLL FOR NEXT