புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறை புனித அந்தோணியாா் ஆலய வளாகத்தில், சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்கத்தை எஸ்.ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இனயம் புத்தன்துறை பங்கு அருள்பணியாளா் ராஜ் முன்னிலை வகித்தாா். இதில், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான், ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஸ்டாலின், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுனில், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலா் ஆசிரியா் அருள்தாஸ், நற்சீசன், குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.