முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 2.09 லட்சம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 2 லட்சத்து 9 ஆயிரத்து 890 வசூலானது.

Updated On : 1 ஜனவரி, 2025 at 11:43 PM
பகிர்:

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 2 லட்சத்து 9 ஆயிரத்து 890 வசூலானது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான திட்டத்தை பக்தா்களின் நன்கொடை மற்றும் கோயில் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான உண்டியல் வருவாயை வைத்து கோயில் நிா்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த உண்டியல் மாதம்தோறும் திறந்து எண்ணப்படும். இதன்படி, அன்னதான உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், அறநிலையத் துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 890 வசூலாகியிருந்தது.