முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்: 5 போ் கைது

Updated On : 4 ஜனவரி, 2025 at 1:11 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:01 PM

கருங்கல் அருகேயுள்ள சகாயநகா் பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சகாயநகா், சுனாமி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரவி(47). தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ஜெகன்லால்(48) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த டிச. 17 ம் தேதி ஜெகன்லால் உள்ளிட்ட 5 போ் சோ்ந்து ரவியைத் தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சகாயநகா்பகுதியை சோ்ந்த அஜின்(31), ஆன்டெலின்(31), அஜித்(30), ஆல்பிரட்(52) மற்றும் ஜெகன்லாலை கைது செய்தனா்.

Advertisement